குளிர் காலத்தில் நெஞ்சில் வசந்தம் ம.இரமேசு.

ஆமாம் இங்கு டென்மார்க்கில் இப்பொழுது குளிர் வாட்டுகின்றது ஆனால் அலைகளில் வந்த செய்தியொன்று எனக்கு வசந்தமானது எங்கள் கண்மணிகள் வசந்தும் அர்ச்சனாவும் கடல் கடந்து பறந்து தங்கள் இசைத்திறமையை மலேசியாவில் காட்டியதே செய்தியாக வந்து என் மனத்தில்
வசந்த கீதம் பாடி நிற்கின்றது.

டென்மார்க்கில் வாழும் தமிழர்களுக்கு பெருமதிப்பை தேடிக்கொடுத்திருக்கும் இந்தப்பிள்ளைகளை எப்படி பாராட்டலாம் என்று தமிழன்னையிடம் கேட்டேன், அன்னையவள் சொன்னது ஒன்றே, பிள்ளைகள் திறமை பற்றி எதுவித ஐயமுமில்லை.

ஆனால் பொறாமைக்காரர்கள் தீயை பாய்ச்சுகின்றார்கள் அதில் வேகி வம்புக்கு செல்லாது விவேகத்தால் மேலும் பல படிகள் முன்னேற வேண்டும் என்பதே அன்னையவள் சொன்ன அமிர்த வார்த்தை.

அடியேன் ஒருநாள் எழுத்துலகில் பெரும் வெற்றியடைகின்றேன் என்றால் அதற்கு என் தமிழ் ஆசான்களும் என் எழுத்துக்களை உலகமறிய பறைசாற்றிய அலைகள் ஆசிரியருக்குமே என்னை வளர்த்த பெருமை சென்று சேரும்.

நான் ஆசையாக கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்திய என் அருமைக் கண்மணி வசந்த் இன்று இப்படியொரு பெருமையை ஈழத்தமிழ் உலகுக்கு சேர்த்ததையிட்டு அளவில்லா ஆனந்தமடைகின்றேன்.

இது எப்படி இருக்கும் என் ஆசானுக்கு என்று நினைத்து பார்த்தால் இராமன் வித்தைகளில் சிறந்து விளங்குகின்றான் என்ற செய்தியை கேட்டு தசரதன் மனம் எப்படி இன்பத்தின் உச்ச நிலைக்கு சென்றிருக்குமோ அதுபோல் ஐயா அவர்களின் மனம் இருந்திருக்கும் என்பதில் ஐயமே இல்லை .

மங்களகரமாக மஞ்சள் கால்சட்டையும் உயரத்தின் அடிநிலை விளக்கும் நீல போர்த்தியும் அணிந்து என் அன்பு வசந்த் ஒலிவாங்கி பிடித்து இடக்கையை மக்களை நோக்கி விளிக்கும் காட்சிகாண ஆயிரம் கண் போதாது.

ஆமாம் இது கொஞ்சம் அதிகம் தான் என்று சிலர் நினைப்பது புரிக்கினறது, ஆனால் நான் வைத்திருக்கும் உள்ளப்பற்றை எப்படி வெளிக்கொண்டுவருவது என்று நீங்கள் கூறுங்களேன்.

செந்தமிழ் செல்வன் அவர்களுக்காக ஆங்கிலத்தில் உரையாடியிருந்தாலும் அவன் தமிழ்ப்பற்றை உணர்ந்த தொகுப்பாளன் இறுதியில் கைகூப்பி வணக்கம் நன்றி சொன்னதே டென்மார்க் வாழும் தமிழ் பயில்விக்கும் ஆசிரியர்களுக்கு வசந்த் வாங்கிகொடுத்த பரிசென்பேன்.

இதை படிக்கும் பொழுது இந்தக்குளிரிலும் உங்கள் நெஞ்சம் வசந்தம் கொண்டாடுகின்றதல்லவா , பெற்றோர்களின் பெருமதிப்பை சொன்னால் ஆசிரியர் பெருந்தகைக்கு பிடிக்காது காரணம் அவர் புகழ்ச்சியை பெரிதாக மதியாதவர் ஆதலினாலே அடியேன் அடக்கி வாசித்து இத்துடன்
முடித்துக்கொள்கின்றேன்.

உணர்வாக்கம்
ம.இரமேசு.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!